சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!
12:40 PM Jun 10, 2025 IST | Murugesan M
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்குத் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் வசிக்கும் செல்வகுமார் என்பவரின் மகன் பரத், தேசிய சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
Advertisement
அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எம்பி அருண் நேரு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், தனது மகனைப் படிக்க வைக்க போதிய வசதி இல்லை என்றும், அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்படுவதாகவும் தந்தை செல்வகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே, மகனின் ஐந்து ஆண்டுக் கால படிப்புக்குத் தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement