சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் - மதுரை உயர்மட்ட குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!
08:01 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
சட்டமன்ற தேர்தலுக்கு நம்பிக்கையுடன் பணியாற்றுமாறும், 2026 நமதே எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சிந்தாமணியில் பாஜகவை சேர்ந்த 18 நிர்வாகிகள் கலந்து கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து தொண்டர்களும் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்றும், 2026 நமதே எனவும் கூறினார்.
Advertisement
சட்டமன்ற தேர்தல் பணிகளை தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் தற்பொழுது தொடங்குமாறு தெரிவித்துள்ள அவர், கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்படவும், நட்பு பாராட்டவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உட்பட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement