சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
12:56 PM Nov 05, 2025 IST | Murugesan M
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது..
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ஜெய்ராம்நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியது.
Advertisement
இதில், பயணிகள் ரயிலில் பயணித்தவர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்தில் ரயிலின் முன்பக்க பெட்டிகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன.
Advertisement
Advertisement