சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு : அன்புமணி ராமதாஸ்
04:28 PM Apr 16, 2025 IST | Murugesan M
சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
Advertisement
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடமாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் கூறினார்.
சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படும் எனக்கூறிய அன்புமணி, தமிழகத்தின் வளர்ச்சியே மாநாட்டின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement