For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

01:09 PM Jun 25, 2025 IST | Murugesan M
சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம்   சர்வதேச தொழிலாளர் அமைப்பு

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு 2015ஆம் ஆண்டு 19 சதவீதமாக இருந்ததாகவும், 2025ஆம் ஆண்டு 64.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது கடந்த பத்தாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு சமூகப் பாதுகாப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், 107 கோடி பேருக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் சீனாவை முந்தி, உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு வழங்குநராக இந்தியா முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்குள் சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் இந்தியா முதன்மை நாடாக மாறும் எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement