For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ!

09:38 AM Nov 03, 2025 IST | Ramamoorthy S
சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ல் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், யு.சி.சி.என். எனப்படும் யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

Advertisement

இந்த அமைப்பு நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதன் கலாசாரம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும், சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில், லக்னோவின் சமையல் படைப்புகள் அந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்சி அசோலே, படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் புதிதாக 58 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் லக்னோ உணவு பண்பாடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து அந்த பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 408 ஆக அதிகரித்துள்ளது.
புதிய அங்கீகாரத்தின் வாயிலாக பல நுாற்றாண்டுகள் பழமையான மரபுகளால் வளப்படுத்தப்பட்ட உணவுக்கான சொர்க்கமாக லக்னோ மாறுகிறது என ஐ.நா சபை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement