சம காலத்திற்கு பொருந்தாத 1500 சட்டங்களை தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி - எல்.முருகன் பேச்சு!
10:06 AM Apr 15, 2025 IST | Ramamoorthy S
சம காலத்திற்கு பொருந்தாத ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சட்டங்களை பிரதமர் மோடி தூக்கி எறிந்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் புத்தாண்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
Advertisement
சாமானிய மக்கள் அனைவருமே இன்று Content creator-களாக திகழ்வதாகவும், Content creation என்பது இந்தியாவில் பெரும் வருவாய் ஈட்டும் விஷயமாக மாறி உள்ளதாகவும் கூறினார்.
காஷ்மீர் 370 சட்ட பிரிவை நீக்கி அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நிறைவேறினார் என்றும, பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன் முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எல்.முருகன் வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement