சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் அறிமுகம் : ஐசிசி
01:45 PM Jun 28, 2025 IST | Murugesan M
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவிலான போட்டிகளிலும் சில புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
அதுபோகச் சில விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி பந்தின் மீது எச்சில் பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது.
Advertisement
ஆனால் பந்தின் மீது எச்சில் பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் பந்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காகச் சில அணிகள் வேண்டுமென்றே எச்சில் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த விதிமுறைக் கொண்டு வரப்படுகிறது.
இதே போல எல்.பி.டபிள்யூ, நோ பால் என மொத்தம் 7 விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுப் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement