சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்? - அஜீத் அகர்கர் விளக்கம்!
11:33 AM May 26, 2025 IST | Murugesan M
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சாய் சுதர்ஷன் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் என தெரிவித்தார்.
Advertisement
இங்கிலாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு எனக் கூறிய அஜீத் அகர்கர், உள்ளூர் போட்டியிலும் சாய் சுதர்ஷனின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement