சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
11:28 AM Oct 28, 2025 IST | Ramamoorthy S
நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கடந்த 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில், சூரசம்ஹார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்அசுரனை மூன்று முறை வேலாயுதத்தால் வதம் செய்தார்.
Advertisement
அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement