சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!
03:36 PM Oct 05, 2025 IST | Ramamoorthy S
சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவர் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோ மீட்டர் தொலைவும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோ மீட்டர் தொலைவும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement
திண்டுக்கல் - காரைக்குடி நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்ததை, சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement