For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

`சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட மாட்டேன் - அமீர்கான்

05:41 PM May 28, 2025 IST | Murugesan M
 சிதாரே ஜமீன் பர்  திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட மாட்டேன்   அமீர்கான்

பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் தயாரித்து நடித்துள்ள `சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து, யூடியூபில் ’பே பெர் வியூ’ என்ற ஆப்ஷனில் வெளியிடப் போவதாக அமீர்கான் கூறியுள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் விற்பனையில் புது முயற்சியாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement