சிந்து நதிநீர் ஒப்பந்தம் - 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!
06:17 PM Jun 07, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு 4 கடிதங்களை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகச் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தும் வரை ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது எனவும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
Advertisement
இந்நிலையில், அந்நாட்டின் நீர்வளத்துறைச் செயலாளர் சையத் அலி முர்தாசா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு 4 கடிதங்களை எழுதி உள்ளார்.
Advertisement
Advertisement