சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!
01:48 PM May 31, 2025 IST | Murugesan M
சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் நடிகர் ராஜேஷ் என ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையில் நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
Advertisement
பல தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதே ராஜேஷின் வாழ்க்கைக்கு சான்று என்றும் சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
தனக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் கற்பிக்க நடிகர் ராஜேஷ் பாடுபடுவார் என்றும் எனது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை உடய நபர் நடிகர் ராஜேஷ் என்று அவர் கூறினார்.
Advertisement
நடிகர் ராஜேஷ் தற்போது நம்மிடம் இல்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது என்றும் நடிகார் ராஜேஷ் இயற்கை எய்தியது அனைவருக்கும் பெரும் இழப்பு என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Advertisement