சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய விமான நிலையங்கள்!
06:57 PM Apr 10, 2025 IST | Murugesan M
உலகில் 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி உள்பட இந்தியாவின் 4 விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.
Advertisement
இந்த நிறுவனம் உலகில் 100 சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32-வது இடத்தையும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்தையும், ஐதராபாத் விமான நிலையம் 56வது இடத்தையும், மும்பை விமான நிலையம் 73வது இடத்தையும் பிடித்துள்ளன.
Advertisement
Advertisement