For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

03:02 PM Jul 05, 2025 IST | Murugesan M
சிறுவன் கடத்தி கொலை   அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

அஞ்செட்டி அருகே சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்க வந்தவர்களை அலட்சியமாக நடத்திய தலைமைக் காவலர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்ற 13 வயது சிறுவனை இரு இளைஞர்கள் கடத்தி கொன்றனர்.

Advertisement

சிறுவன் மாயமானதாகக் கடந்த 2ம் தேதி இரவு 10:30 மணியளவில் தொலைப்பேசி மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அன்றிரவு 8 மணியளவில் சிறுவன் கொலை செய்யப்பட்டான்.

இந்நிலையில் புகாரளிக்க வந்தவர்களிடம், 'நீ பெரிய கோடீஸ்வரனா' எனக்கேட்ட போலீசார், அவர்களைத் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதற்குக் கண்டனம் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலர் சின்னதுரை, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement