சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு : நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்றத்தில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், பல்வேறு புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், அசாமில் புதிதாக யூரியா உர தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 1 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,
புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன், பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழும் வகையில், பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இளைஞர்களுக்கு 5 இடங்களில் உலகத் தரத்துடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.