சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
06:29 PM Jun 07, 2025 IST | Murugesan M
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடகாம பாலைவன பகுதியருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அடுக்குமாடிக் குடியிருப்புகள் குலுங்கின.
Advertisement
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
Advertisement
Advertisement