சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு - நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
10:29 AM Jul 05, 2025 IST | Ramamoorthy S
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஜெஸ்ரில் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது மாணவன், அஸ்வந்த் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை பெற்றோரை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்.
மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தமிழக பாஜக போராடும் என்றும், குடும்பத்துக்கு எப்போதும் துணை நிற்போம் என நயினார் நாகேந்திரன் உறுதி அளித்தார்.
Advertisement
அப்போது, மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் ஏ.கே.பெருமாள், முன்னாள் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு. மேப்பல் ம. சக்தி , சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் திரு. @DPandidurai மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Advertisement
Advertisement