சீதா பயணம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
12:59 PM Jun 13, 2025 IST | Murugesan M
நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதா பயணம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் நீண்ட இடைவேளைக்குப் பின், சீதா பயணம் என்ற திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார்.
Advertisement
ஸ்ரீராம் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்யராஜ், நடிகை கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.
Advertisement
இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement