சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!
03:28 PM Jun 07, 2025 IST | Murugesan M
சீனா ரகசியமாக வைத்திருந்த 'டி.எப்., - 5பி' எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் ஏவுகணை குறித்த விவரங்கள் அந்நாட்டு அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த ஏவுகணை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் உடையது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பாவின் பல பகுதிகளை எளிதில் தாக்க முடியும். 2 அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
Advertisement
இது இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுக்குண்டைக் காட்டிலும் 200 மடங்கு வீரியம் கொண்டது எனவும் சீன அரசு ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் தற்போது 600 அணு ஆயுதங்கள் உள்ளன. இதனை வரும் 2030-க்குள் ஆயிரமாக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement