சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
03:40 PM Apr 08, 2025 IST | Murugesan M
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அந்நாடு மீது 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத வரியை விதித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
சீனா தனது 34 சதவீத வரி விதிப்பைத் திரும்பப் பெறவில்லை என்றால் அந்நாடு மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement