சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!
05:33 PM Jun 27, 2025 IST | Murugesan M
சீனாவின் கிங்டாவோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகச் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனை, ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். அப்போது அவருக்குப் பீகாரிலிருந்து கொண்டு வரப்பட்ட மதுபானி ஓவியத்தை ராஜ்நாத் சிங் பரிசளித்தார்.
Advertisement
இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு உறவுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement