சுற்றுலா பயணிகளைத் துரத்திய காட்டுயானை!
12:27 PM Mar 13, 2025 IST | Murugesan M
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மசினகுடி செல்லும் சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் காரில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயன்றனர்.
Advertisement
இதனால் அந்த யானை அவர்களை துரத்த தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக காரை இயக்கி உயிர் தப்பினர்.
Advertisement
Advertisement