சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!
02:48 PM Jun 07, 2025 IST | Murugesan M
பாலிவுட் நடிகர் அமீர்கான் சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணிபுரியவுள்ள சூப்பர் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் 2-ம் பாதியில் தொடங்கும் என தெரிவித்தார்.
Advertisement
2014-ம் ஆண்டு வெளியான தனது நகைச்சுவை படமான "பி.கே" படத்தின் தொடர்ச்சி குறித்த செய்திகளையும் அமீர்கான் நிராகரித்தார்.
அதற்குப் பதிலாக, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க "பி.கே" இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணைவதாக அமீர்கான் தெரிவித்தார்.
Advertisement
Advertisement