சூரியின் மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!
12:35 PM May 02, 2025 IST | Murugesan M
சூரி நடித்துள்ள மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது. கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
Advertisement
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement