செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!
12:39 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
ஜம்மு - காஷ்மீரின் செனாப் ரயில் பால திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், செனாப் நதிக்கு மேலே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி, அண்மையில் திறந்து வைத்தார். செனாப் ரயில் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றியவர்களில், பேராசிரியை மாதவி லதாவும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Advertisement
பெங்களூருவில் உள்ள, இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான இவர், செனாப் ரயில் பால திட்டத்தில், புவி தொழில்நுட்ப ஆலோசகராக 17 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளார். இவர் நிலப்பரப்பால் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு பால கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement