சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து!
11:11 AM Jun 08, 2025 IST | Ramamoorthy S
சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் கனிஷ் என்பவர், தனது மனைவியுடன் பட்டினப்பாக்கத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பியபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கவனிக்காமல் வேகமாக வாகனத்தை இயக்கி உள்ளார்.
Advertisement
பேரி கார்டின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இருப்பினும், காரில் எமர்ஜென்சி பலூன் இருந்ததால் கனிஷும், அவரது மனைவியும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
Advertisement
Advertisement