சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் - அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!
10:02 AM Jul 06, 2025 IST | Ramamoorthy S
சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
ஜல்லடியன்பேட்டை கோவலன் தெருவில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அருகில் இருந்த 5 குடிசை வீடுகளுக்கும் தீ பரவிய நிலையில், அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
Advertisement
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement