சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
10:36 AM Apr 14, 2025 IST | Ramamoorthy S
சென்னை சேத்துப்பட்டில் உள்ள RSS அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது.
டாக்டர் ஹெட்கேவார் சமாராக் சபை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலும், திருக்குலத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேரருளாளன் முன்னிலையிலும் இந்த விழா நடைபெற்றது.
Advertisement
இதில், சமூக நலனுக்காக பணியாற்றிய ஸ்ரீலஸ்ரீ சிவலோக தேசிகர் ஸ்வாமிகள், விமல் ஜயா சுவாமிகள், பி. லோகேஷ், ஆ. முருகானந்தம், டி. திருநாவுக்கரசு, ஆர். ராஜேந்திர பிரசாத், எல். பூவரசன் ஆகியோருக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட தமிழகம் ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளர் பிரஷோப குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement