சென்னை : போதை ஊசி பயன்படுத்திய பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி!
03:18 PM Jun 11, 2025 IST | Murugesan M
சென்னை விருகம் பாக்கத்தில் போதை ஊசி பயன்படுத்திய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருகம் பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள தனியார்ப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தனது நண்பர்களோடு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காஃபி ஷாப்புக்கு சென்றுள்ளார்.
Advertisement
அங்குப் போதை ஊசி பயன்படுத்திய சிறுவன் பிறகு தனது வீட்டுக்கு வந்து போதையில் தூங்கியுள்ளார். பின்னர் அதிகாலையில் சிறுநீர் கழித்தபோது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் போதை ஊசி பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement