செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்த காவலர்!
01:15 PM Jun 09, 2025 IST | Murugesan M
செய்யாறு அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காவலரும், இளைஞர்களும் விரட்டி பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோரணம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.
Advertisement
இதனைக் கண்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றனர். செய்யாறு பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்ட காவலரும், காரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.
ஆனால், கார் நிற்காமல் செல்லவே அவரும் விரட்டி சென்றார். இதனிடையே, கீழப்பழந்தை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
Advertisement
காரில் இருந்த பார்த்திபன் என்பவரை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement