ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!
07:50 PM Jun 10, 2025 IST | Murugesan M
ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியுள்ளதாகத் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நௌகாம் ரயில் நிலையத்திலிருந்து கத்ராவுக்கு வந்தே பாரத் ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார்.
Advertisement
செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ரயில் சென்றபோது இயற்கை அழகைக் கண்டுகளித்தார்.
ரயில் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் தயாரிக்கப்படும் பொருட்கள் இனி கன்னியாகுமரி, பட்னா, கொல்கத்தா, மும்பை சென்றடையும் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் வரவேண்டும் என்ற முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் கனவுகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளதாகக் கூறினார்.
Advertisement