ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!
02:44 PM Jun 07, 2025 IST | Murugesan M
ஜம்மு காஷ்மீரில் நேற்று பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கு கட்டப்பட்ட நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
Advertisement
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் இப்பாலத்தின் வழியாக கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயிலையும் பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இன்று ஸ்ரீநகர் ரயில் நிலையத்திலிருந்து கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் ரயிலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்தனர்.
Advertisement
Advertisement