ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
07:53 AM Jun 07, 2025 IST | Ramamoorthy S
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலமாக கனடா பிரதமர் மார்க் கார்னே அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமரின் அழைப்பு மகிழ்ச்சி அளித்ததாகவும், தேர்தல் வெற்றிக்காக அவருக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
துடிப்பான ஜனநாயக நாடுகளான இந்தியாவும், கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆழமான உறவால் இணைந்து திறம்பட செயல்படுமெனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement