ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு தொடக்கம்!
05:48 PM Feb 21, 2025 IST | Murugesan M
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க பிரசாந்த் நீல் ஒப்பந்தமானார். நீண்ட நாட்களாகவே இதன் நடிகர்கள் ஒப்பந்தம் மற்றும் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
Advertisement
இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொள்ளவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் தொடங்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றிணை படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement