ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் - ஜோகோவிச் சாம்பியன் பட்டம்!
11:03 AM May 26, 2025 IST | Murugesan M
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
Advertisement
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ஜோகோவிச் சுதாரித்துக் கொண்டு ஆடினார். பின்னர் அடுத்த இரு செட்களை 7-6, 7-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஜெனீவா ஓபன் தொடரில் பட்டம் வென்றது 100வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement