For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

10:35 AM Apr 15, 2025 IST | Ramamoorthy S
ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம்   பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அழைப்பு

இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போது ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்து அதை அனைவரையும் உச்சரிக்கக் கோரியதற்கு ஹிந்து விரோத தீய சக்திகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

ஆளுநர்  கலந்துகொண்டது கம்பன் விழாவில் கம்பராமாயணத்தின் நாயகன் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் பிறகு அந்நிகழ்ச்சியில் ராம நாமத்தை உச்சரிக்காமல் வேறு என்ன பெயரை உச்சரிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அல்லேலூயா என கோஷமிட்ட போது அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்ததற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என தெரிவித்துள்ளார்

Advertisement

இந்திய அரசியல் சாசனத்தின் ஆலயமாக விளங்கும் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்து அரசியல் சாசன நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்த ஈவெராவின் பெயரைக்கூறி பெரியார் வாழ்க என கோஷமிட்ட இறையாண்மைக்கு விரோதமான செயலில்டி திராவிட மாடல் கும்பல் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று ஜெய் ஸ்ரீராம் என்கிற ராம நாமத்தை கேட்ட உடன் பதட்டத்தில் பிதற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என உதாரண புருஷராக விளங்கிய உலக ஹிந்துக்களின் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமபிரானின் பெயரை ஆளுநர் ஆர்.என்.ரவி  உச்சரிக்கும் போது திராவிட மாடல் என்கிற பெயரால் கலாச்சாரத்தை சீரழித்த கூட்டத்திற்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீராமனின் பெயர் கொண்ட M.G.ராமச்சந்திரன் அவர்களால் இந்த திராவிட மாடல் கும்பல் 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் இருந்தது பிரபு ஸ்ரீராமச்சந்திரனின் பெயரை ஆளுநர் உச்சரித்த உடன் நினைவுக்கு வருகிறது போல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement