டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் - அண்ணாமலை
தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அந்த பணம் திமுகவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை திசை திமுக முயற்சி செய்வதாகவும், "டெல்லி, சத்தீஸ்கரை விட மிகப்பெரிய ஊழல் நடைபெற்றள்ளதாகவும் அவர் கூறினார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலை நாம் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்ர
வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் முற்றுகையிடப்படும் எனறும் அவர் கூறினார்.