டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்
04:50 PM Jun 06, 2025 IST | Murugesan M
டூரிஸ்ட் பேமிலி படத்தில் தன் பட பாடலை படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்ற மலையூர் நாட்டாமை பாடல் படத்தின் காட்சியில் முக்கிய பங்கு வகித்தது. இப்பாடல் நடிகர் பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கி, தயாரித்த மம்பட்டியான் படத்தில் இடம்பெற்றிருந்தது.
Advertisement
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தியாகராஜன், தன் படத்தின் பாடலை கேட்காமலேயே பயன்படுத்தியதால் பலரும் வழக்குத் தொடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளார்.
ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு சந்தோஷப்படுகிறேனே தவிர, வழக்கு தொடர்ந்து காசு பார்க்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement