டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
02:03 PM Jun 09, 2025 IST | Murugesan M
டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் பொது போக்குவரத்துக்கு இ-ரிக்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள மையத்தில் இ-ரிக்சாக்களுக்கு சார்ஜிங் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், இளைஞர் ஒருவரும், 60 வயது முதியவரும் உயிரிழந்தனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement