டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது - ஒலிபெருக்கு மூலம் அறிவிக்கும் பெட்ரோல் நிறுவனங்கள்!
11:08 AM Jul 01, 2025 IST | Ramamoorthy S
டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசை குறைக்க ஜூலை 1ஆம் தேதி முதல் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
அந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பழமையான வாகனங்களுக்கு எரிபொருள்வழங்கப்படாது என ஒலிபெருக்கு மூலம் பெட்ரோல் நிலையங்கள் அறிவித்து வருகின்றன.
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படாது என்றும், 15 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement