டெல்லி சட்டசபை தேர்தல் : இன்று மாலையுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரசாரம்!
10:10 AM Feb 03, 2025 IST | Murugesan M
டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்கிறது.
டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
Advertisement
கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்கள் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அதனால் தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது.
அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களில் பரப்புரையால் டெல்லி தேர்தல் களம் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
Advertisement
Advertisement