டெல்லி : மறுவடிவமைக்கப்பட்ட பூங்கா திறப்பு!
04:40 PM Jun 10, 2025 IST | Murugesan M
டெல்லி கவுதம் நகரில் மறுவடிவமைக்கப்பட்ட சத்பவானா பூங்காவை முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் துணை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய ரேகா குப்தா, யமுனை நதியைச் சுத்தம் செய்வதை மேற்பார்வையிடுவதற்காக 20 குழுக்களுக்குப் பதிலாக ஒரு மையப்படுத்தப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisement
புதிய குழுவில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும், நாற்பது புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, டெல்லியில் புதிய அரசு அமைந்ததிலிருந்து வசந்தம் வீசத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement