டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை!
06:32 PM Jul 05, 2025 IST | Murugesan M
டெல்லியில் வீடு ஒன்றிலிருந்து மூவர் சடலமாக மீட்டகப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்சின்புரி பகுதியில் உள்ள வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் மயங்கிக் கிடந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதில் மூவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement