டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் - எலான் மஸ்க்!
02:12 PM Jun 06, 2025 IST | Murugesan M
டொனால்டு ட்ரம்ப் நன்றி கெட்டவர் எனத் தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், 2019ஆம் ஆண்டு மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்ட பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும், நீதிமன்ற வெளியிட்டுள்ள ஆவணங்களில் டிரம்ப் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
இதனிடையே, தான் உதவி செய்யாவிட்டால் ட்ரம்பால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்டு ட்ரம்ப் நன்றி கெட்டவர் எனவும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Advertisement
Advertisement