தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை - ரயில்வே துறை மறுப்பு!
07:45 AM Apr 12, 2025 IST | Ramamoorthy S
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் பயணங்களின் போது உடனடியாக பயணிக்க தட்கல் முறை பின்பற்றப்படுகிறது. குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், படுக்கை வசதிக்கு முற்பகல் 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
Advertisement
இந்நிலையில் தட்கல் மற்றும் பிரிமியர் தட்கலுக்கான முன்பதிவு நேரம் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள IRCTC, தட்கல் முன்பதிவு நேரங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Advertisement