தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி - அக்ஷரா ஹாசன் குற்றச்சாட்டு!
07:26 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்று வருவதாக, நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,இப்ராஹிம் அக்தர் என்ற நபர் தனது குடும்ப பெயரை பயன்படுத்தி உதகையில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் தாங்கள் ஈடுபடுவதாக கூறி அவர் மோசடி செய்வதாகவும், அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement