For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

07:08 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஜூன் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஜூன் 11-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், ஜூன் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement