தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது : அண்ணாமலை விமர்சனம்!
தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,
தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது என அண்ணாமலை விமர்சித்தார். தமிழகத்தில் கோயில்களுக்கு காணிக்கையாக வரும் தங்கத்திற்கு உரிய கணக்கு இல்லை என தெரிவித்தார்.
"அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றவர்கள் தான் முதலமைச்சருக்கு டப்பிங் கொடுக்கின்றனர் என்றும் திமுக அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜகவிற்கு யாருடைய டப்பிங்கும் தேவையில்லை என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 7% வாக்குகளை இழந்துள்ளது திமுக என்றும் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது என டிஜிபியே ஒப்புக்கொண்டுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.